7.28.2011

நடிகையின் திடுக் கதை


அந்த அழகு நடிகையின் ரூம் கதவு தட்டப்பட்டது.நடிகை தூக்கம் கலைந்து எழுந்து கதவை திறந்தாள், தாயின்  கலவர முகம் கண்டு அதிர்ந்தாள்.என்ன என்ற வினாவுக்கு அன்றைய தொலைக்காட்சியின் தலைப்பு செய்தி பதிலானது.

"பிரபல நடிகர் மயூர் கானுடன் நடிகை கார்லின் கோப்ரா உல்லாசம்" என்று படுக்கை அறை காட்சிகள் ஒளிபரப்பானது.தனது மொபைல் போனை சட்டென்று ஆப் செய்தாள் லேன்ட் லைன் இணைப்பும் துண்டிக்க பட்டது.இரண்டு நாட்களுக்கு முன்பு கோவாவில் போதையில் அரங்கேறிய சல்லாப காட்சிகள் எப்படி வெளியானதேன்று குழம்பினாள்.

தாயாரின் தொலைபேசியில் மயூர் கான் பேசினார் ...

கோப்ரா : ஹலோ 
 மயூர் : என்னது 
கோப்ரா : எனக்கு தெரியாது ..

மயூர் :என்னை மிரட்ட பாக்குறியா ..நீ தே ...ன்னு சொல்லி உன் மார்கெட்டை காலி பண்ணிடுவேன் ,,
கோப்ரா : ஐயோ சத்தியமா எனக்கு எதுவும் தெரியாது ..

மயூர் :எல்லாம் நான் பிரைவேட் டிடெக்டிவ்  வைத்து செக் பண்ணிட்டேன் ..உன்னோட யு டுப் சேனல் மூலமா உங்க வீட்டு  ஐ பி அட்ரஸ்லிருந்து  தான் இந்த  வீடியோ வெளியாய் இருக்கு 

கோப்ரா :நீங்க என்ன சொன்னாலும் நான் கேக்குறேன்...நானா விரும்பி தான் உங்களுடன் தங்கினேன்.உங்க ரூமில் தானே  இருந்தோம் எப்படி இப்படி எல்லாம் நடந்தது  எதுவுமே தெரியாது ..விளக்கை அனையுங்கன்னு கூட கெஞ்சினேன் நீங்க தான் கேக்கலை ..ஐயோ தற்கொலை செஞ்சுக்கலாம்னு தோணுது..

மயூர்: தப்பு  தப்ப யோசிக்காதே...ரெண்டு   நாள் எல்லா ஷூட்டிங்கும் கான்செல் பண்ணு  யாருக்கும் பேட்டி  கொடுக்காதே ..நா சாந்திரம் உன் வீட்டுக்கு வர்றேன் 

கோப்ரா : சரி 
***************

இடைப்பட்ட வேளையில் நம்பர் ஒன் தொலைகாட்சிகள் தொடங்கி புலனாய்வு பத்திரிக்கைகள் மற்றும் மஞ்சள் பத்திரிக்கைகள் வரை அனைவரும் பல கதைகள், கேள்விகள் எழுப்பின.

 தன் சொந்த மகள் நடத்திய பேஷன் ஷோவை தலைமையேற்று தொடங்கி வைத்த மதவாத  கட்சி தலைவர்  ஒருவர் நம்ம கலாச்சாரத்தை கெடுத்த இந்த நடிகரையும் நடிகையையும் நாடு கடத்த வேண்டும் என  பேட்டி கொடுத்ததும். 

தொண்டர்கள் என்ற பெயரில் குண்டர்கள் பலர் நடிகையின் வீட்டு முன்பு போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுப்பட்டனர்.நடிகரின் படம் ஓடும் திரை அரங்குகள்  சூறையாடப்பட்டன 

இப்படி நாடே பரபரப்பான பின் அமைதி காக்க முடியாமல் அன்றே GONE-2  இயக்குனரின் அறிவுரை படி  நடிகரும் நடிகையும் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க முடிவு செய்தனர்.

திட்டபிட்ட படியே நடிகர் மயூர் கானும் நடிகை கார்லின் கோப்ராவும் தங்களை இயல்பாகவே காட்டி கொண்டார்கள் ..தயார் செய்து வைத்திருந்த அறிக்கையை மயூர் கான் முதலில் படித்தார்.."நீங்கள் டிவியில் ஒளிபரப்பிய படுக்கை அறை காட்சியானது நாங்கள் இருவரும் சேர்ந்து நடித்து அடுத்து வெளிவரபோகும் GONE-2 பட காட்சிகள் அது எப்படி வெளியானது  என்று தெரியவில்லை..அதை கண்டுபிடிக்க காவல் துறையின் உதவியை நாடி உள்ளோம்.நாங்கள் நல்ல குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்திய கலாச்சாரத்தை போற்றி ஏற்று வாழ்த்து வருகிறோம். எங்களை வாழவைக்கும் ரசிகர்களின் மனம் நோகாமல் நடந்து கொள்ளவே விரும்புகிறோம்.சமுதாய அக்கறையுடன் இந்த படுக்கை அறை காட்சிகள் வரபோகும் படத்தில் இருந்து நீக்க கோரி தயாரிப்பாளரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.இனி என் படங்களில் முத்த காட்சிகளோ படுக்கை அறை காட்சிகளோ இருக்காது என்ற ரசிகர்கள் மற்றும் தாய்குலங்களிடம் உறுதி  அளிக்கிறேன்.நடிகர்களும் மனிதர்களே எங்கள் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து பத்திரிகை நண்பர்கள் கற்பனை செய்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்." என அறிக்கை நிறைவு பெற்றது. பத்திரிக்கையாளர்களின் சரமாரி கேள்விகள் அனைத்திற்கும் இருவரும் சாமர்த்தியமாய் பதில் அளித்தனர் .


ரகசியமாய் திட்டம் போட்டு இவை அத்துன்னையையும் அரங்கேற்றிய GONE-2 பட இயக்குனர் கம் தயாரிப்பாளர் வெள்ளிகிழமை ரிலீஸ் ஆக போகும் படத்திற்கு கிடைத்த பப்ளிசிட்டியால் மகிழ்ந்து போயி இருந்தார்.

--------------------------------------------------------------------------முற்றும் -----------------------------------------------








37 comments:

  1. எப்படியெல்லாம் பப்ளிசிட்டி பண்றாங்கப்பா..?

    ReplyDelete
  2. கலக்கலான சிறுகதை.....வித்தியசமான நாட்....அருமை

    ReplyDelete
  3. புதுசு புதுசா யோசிகிரங்கபா

    ReplyDelete
  4. அருமையான கதை நண்பா
    நடக்கும் நிகழ்வுகளை வியாபார, விளம்பர யுக்திகளை, குருர எண்ணங்களை, வெட்ட வெளிச்சமாய் காட்டிய அசத்தல், சிறு, சிறப்பு கதை ஆரம்பமே அமர்க்களம் தொடர்ந்து அசத்துங்கள்

    ReplyDelete
  5. # கவிதை வீதி # சௌந்தர் said...
    எப்படியெல்லாம் பப்ளிசிட்டி பண்றாங்கப்பா..?

    @@@@@@@
    இதுவ்வும் நடக்கலாம் அல்லவா ? நன்றி சகோ

    ReplyDelete
  6. ரஹீம் கஸாலி said...
    கலக்கலான சிறுகதை.....வித்தியசமான நாட்....அருமை
    @@@@@@@
    நன்றி சகோ

    ReplyDelete
  7. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    புதுசு புதுசா யோசிகிரங்கபா
    @@@
    நன்றி சகோ

    ReplyDelete
  8. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    கலக்கல்


    @@@@@@@@@@
    நன்றி சகோ

    ReplyDelete
  9. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    என்று என் வலையில்

    ராஜ் மெட்ரிக் ஸ்டுடண்ட் பவுண்டேஷன் – ஒரு புதிய புரட்ச
    @@@@@@@@
    பார்த்தேன் சகோ ...நன்றி

    ReplyDelete
  10. A.R.ராஜகோபாலன் said...
    அருமையான கதை நண்பா
    நடக்கும் நிகழ்வுகளை வியாபார, விளம்பர யுக்திகளை, குருர எண்ணங்களை, வெட்ட வெளிச்சமாய் காட்டிய அசத்தல், சிறு, சிறப்பு கதை ஆரம்பமே அமர்க்களம் தொடர்ந்து அசத்துங்கள்
    @@@@@2
    நன்றி சகோ

    ReplyDelete
  11. நல்ல பப்ளிசிட்டி தான் போங்க ))

    ReplyDelete
  12. வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட சிறுகதை ,, அருமை..

    ReplyDelete
  13. நாட்டு நடப்பை புட்டுபுட்டு வச்சிட்டீங்க! ஒரு படம் ஒட்ட என்னவெல்லாம் பண்றாங்க!..ம்!

    ReplyDelete
  14. கந்தசாமி. said...
    நல்ல பப்ளிசிட்டி தான் போங்க ))
    @@@@@

    முதல் வருகை !!! நன்றி தொடர்ந்து வாங்க ...!!நன்றி

    ReplyDelete
  15. * வேடந்தாங்கல் - கருன் *! said...
    வித்தியாசமான கோணத்தில் எழுதப்பட்ட சிறுகதை ,, அருமை..
    @@@@

    நன்றி சகோ

    ReplyDelete
  16. thalir said...
    நாட்டு நடப்பை புட்டுபுட்டு வச்சிட்டீங்க! ஒரு படம் ஒட்ட என்னவெல்லாம் பண்றாங்க!..ம்!
    @@@@@

    முதல் வருகை !!! நன்றி தொடர்ந்து வாங்க ...!!நன்றி

    ReplyDelete
  17. திரைக்கதையையும் மிஞ்சிவிட்டார்கள் .......வெளங்கிடும்

    ReplyDelete
  18. koodal bala said...
    திரைக்கதையையும் மிஞ்சிவிட்டார்கள் .......வெளங்கிடும்

    @@@@@@@@
    நண்பா இது முழுக்க கற்பனை கதை

    ReplyDelete
  19. koodal bala said...
    Tamizhmanam vote no : 7

    @@@@@@@@@@
    நன்றி நண்பா மிக்க நன்றி

    ReplyDelete
  20. வணக்கம் பாஸ், வித்தியாசமான ஒரு படைப்பு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் இவ்வாறான அருமையான இலக்கியப் படைப்புக்கள் வர வேண்டும் என வேண்டுகிறேன்.
    வாழ்த்துக்கள் சகோ.
    உங்களிடமும் நல்லதோர் எழுத்தாற்றல் இருக்கிறது என்பதற்குச் சான்றாக இப் பதிவு அமைந்திருக்கிறது.

    ஒரு வித்தியாசமான இடுகை, இறுதியில் சஸ்பென்ஸ் வைத்து முடித்திருக்கிறீங்க.
    படத்திற்காக அரங்கேற்றப்பட்ட கதை என்றாலும், உங்கள் எழுத்து நடையில் படிக்கும் போது, வித்தியாசமாக இருக்கிறது பாஸ்.

    ReplyDelete
  21. பாஸ், தமிழ்மணத்தைக் காணவில்லையே?

    ReplyDelete
  22. பாஸ், தமிழ்மணம் ஒர்க் ஆகுது.

    ReplyDelete
  23. நல்லாத்தான் கதை எழுதி இருக்குறீங்க வாழ்த்துக்கள் .
    இன்று என்தளத்தில் உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட
    அவலைப் பெண்ணின் சோககீதம் உள்ளது உங்கள்
    கருத்தை நிறையவே அள்ளிப் போட்டுவிடுங்கள்
    புதுமைப் பையா........

    ReplyDelete
  24. நிரூபன் said...
    வணக்கம் பாஸ், வித்தியாசமான ஒரு படைப்பு. உங்களிடமிருந்து தொடர்ந்தும் இவ்வாறான அருமையான இலக்கியப் படைப்புக்கள் வர ................
    @@@@@@@@@@@@@

    உங்கள் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

    ReplyDelete
  25. நிரூபன் said...
    பாஸ், தமிழ்மணத்தைக் காணவில்லையே?
    @@@@@@@@
    அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்

    ReplyDelete
  26. நிரூபன் said...
    பாஸ், தமிழ்மணம் ஒர்க் ஆகுது.
    @@@@@@@@
    நன்றி

    ReplyDelete
  27. அம்பாளடியாள் said...
    நல்லாத்தான் கதை எழுதி இருக்குறீங்க வாழ்த்துக்கள் .
    இன்று என்தளத்தில் உறவுகளால் வஞ்சிக்கப்பட்ட
    அவலைப் பெண்ணின் சோககீதம் உள்ளது உங்கள்
    கருத்தை நிறையவே அள்ளிப் போட்டுவிடுங்கள்
    புதுமைப் பையா........
    @@@@@@@@

    நன்றி

    நன்றி

    ReplyDelete
  28. கற்பனையை காட்டி விற்பனையா.....அருமை

    ReplyDelete
  29. தேவைகளற்றவனின் அடிமை said...
    கற்பனையை காட்டி விற்பனையா.....அருமை

    @@@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  30. ஆஹா.. இதான் ரூம் போட்டு யோசிக்கிறதா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  31. மாய உலகம் said...
    ஆஹா.. இதான் ரூம் போட்டு யோசிக்கிறதா....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    @@@@

    தூக்கம் வாரதப்ப யோசித்தது ...நன்றி நண்பா

    ReplyDelete
  32. இப்படித்தான் பல புதுப்படங்கள் வெளியாகும்போது சில நிகழ்வுகள் நடைபெறுவதைப் பார்க்கும்போது விற்பனைக்காகவோ எனத் தோன்றுகிறது

    ReplyDelete
  33. அன்பின் ரியாஸ் - கதை இயல்பாகவே நல்லாவே இருக்கு - நடிகர் நடிகை இயக்குனர் தயாரிப்பாளர் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்திய முடிவு -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  34. வணக்கம்
    ரியாஸ் அஹமது (அண்ணா)

    இன்று வலைச்சரப் பொறுப்பேற்றதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது உண்மையில் படிக்கும் போது நடிகை பற்றிய வரலாறு அழகாக விளங்குது அப்படிய புட்டுப்புட்டு வைச்சிருக்கிங்கள் அண்ணா மின்சாரம் நேரம் கிடைக்கும் போது நம்ம பக்கமும் வாருங்கள் அண்ணா
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete